சூர்யாவிற்கு வில்லனாகும் தமன்னாவின் காதலர்
ADDED : 755 days ago
நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மும்முரமாய் நடந்து வருகிறது. சரித்திரம் மற்றும் பேண்டஸி கலந்த படமாக உருவாகி வருகிறது. இதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 43வது படத்தை தயாரித்து நடிக்கவுள்ளார் சூர்யா. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் கதாநாயகியாக நஸ்ரியா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ‛மிர்ஷாபுர்' வெப் தொடரில் நடித்து பிரபலமான நடிகர் விஜய் வர்மா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஜய் வர்மாவை தான் தற்போது நடிகை தமன்னா காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.