ஹாய் நான்னா படத்தின் முதல் சிங்கிள் அறிவிப்பு
ADDED : 764 days ago
நடிகர் நானி தற்போது அறிமுக இயக்குனர் சவுர்யா இயக்கத்தில் தனது 30வது படமான 'ஹாய் நான்னா' எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாகூர் நடிக்கிறார். அப்பா, மகள் உறவு குறித்து இந்த படம் உருவாகிறது. ஹிருதயம் பட இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வாகப் இசையமைக்கும் இந்த படத்தை வைரா நிறுவனம் தயாரிக்கின்றனர். தற்போது இந்த படத்திலிருந்து முதல் சிங்கிள் தமிழில் 'நிழலியே' எனும் பெயரில் வருகின்ற செப்டம்பர் 16ம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதேப்போல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் முதல்பாடல் வெளியாக உள்ளது.