உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டன்கி ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்திய ஷாரூக்கான்

டன்கி ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்திய ஷாரூக்கான்

ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'டன்கி'. ஷாரூக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படம் வருகின்ற டிசம்பர் 22ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவித்தனர். ஆனால், சமீபத்தில் இத்திரைப்படம் தள்ளிப்போவதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இந்த நிலையில் ஜவான் பட சக்சஸ் விழாவில் டன்கி திரைப்படம் டிசம்பர் 22ம் தேதி உறுதியாக வெளியாகும். இதில் என்ற மாற்றமும் இல்லை என உறுதிபடுத்தினார் ஷாரூக்கான். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக சமூக வலைதளங்களில் ஒரே வருடத்தில் ஷாரூக்கான் நடித்த மூன்று படங்கள் வெளியாகிறது என பகிர்ந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !