துல்கர் சல்மானுக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள்
ADDED : 751 days ago
நடிகர் துல்கர் சல்மான் நடித்து கடைசியாக வெளிவந்த 'கிங் ஆப் கொத்தா' படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இதையடுத்து மலையாளம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கின்றனர். இந்த படத்தில் கதாநாயகியாக சாக்ஷி வைத்தியா,மீனாட்சி சௌத்ரி என இருவரும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. கூடுதலாக, பணம் மோசடி குறித்து பேசும் இதன் படப்பிடிப்பு அடுத்த வருடத்தில் அமெரிக்காவில் 50% சதவீதம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.