உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சீக்ரெட்டாக திருமணத்தை முடித்த அகிலன் புஷ்பராஜ்

சீக்ரெட்டாக திருமணத்தை முடித்த அகிலன் புஷ்பராஜ்

தொலைக்காட்சி நடிகரான அகிலன் புஷ்பராஜ், பாரதி கண்ணம்மா தொடரில் அகிலன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலாமானர். தற்போது வெள்ளித்திரையில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருவதால் சீரியல்களில் நடிப்பதில்லை. அகிலன் நீண்ட நாட்களாக அக்ஷயா முரளிதரன் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் செப்டம்பர் 14 ஆம் தேதி இருவருக்கும் உற்றார் உறவினர் புடைசூழ திருமணம் முடிந்துள்ளது. அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அகிலனுக்கு விஜய் டிவி பிரபலங்களான, அருண் பிரசாத், ரோஷ்னி ஹரிப்ரியன், பரீனா ஆசாத், நித்யஸ்ரீ உட்பட ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் கூறிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !