இரட்டை நிலவுக்கு தாயான ஸ்வேதா
ADDED : 775 days ago
பிரபல சின்னத்திரை நடிகையான ஸ்வேதா பண்டேகர், சந்திரலேகா தொடரில் நடித்திருந்தார். சீரியல் முடிந்த கையோடு சக நடிகரான மால்மருகன் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலான ஸ்வேதாவுக்கு தற்போது இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர். அதிலும் ஒரு குழந்தை ஆண் மற்றொரு குழந்தை பெண் என கலப்பு இரட்டையர்களாக பிறந்துள்ளனர். குழந்தைகளின் கைகள் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஸ்வேதா தன் குழந்தைகளை நிலவு என வர்ணித்து அழகான கவிதை ஒன்றையும் எழுதியுள்ளார். இரட்டை நிலவுக்கு தாயான ஸ்வேதாவுக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.