உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் மக்கள் இயக்கம் தொடங்கும் இலவச மினி கிளினிக்

விஜய் மக்கள் இயக்கம் தொடங்கும் இலவச மினி கிளினிக்

நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை விரைவில் அரசியல் கட்சியாக மாற்றப் போவதாக கூறப்படும் நிலையில், மாவட்டம் தோறும் புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார்கள். அதோடு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் விஜய் விழியகம் தொடங்கப்பட்டு, அதன் மூலம் ஏராளமான ரசிகர்கள் கண்தானம் செய்து வருகிறார்கள். அதேபோன்று விஜய் பயிலரங்கத்தின் மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுத்து வருகிறார்கள். இப்படியான நிலையில், தற்போது விஜய் மருத்துவ அணியின் சார்பில் மினி கிளினிக் தொடங்க திட்டமிட்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் உள்ள பல பகுதிகளிலும் விஜய் மினி கிளினிக் தொடங்கப்பட்டு இலவச மருத்துவம் வழங்க திட்டப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனை விஜய் மக்கள் இயக்கத்தின் மருத்துவர் அணி சார்பில் சமீபத்தில் சென்னை பனையூரில் நடைபெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !