தள்ளிப்போகும் பார்கிங் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ADDED : 765 days ago
புதுமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்து முடித்துள்ள படம் 'பார்கிங்'. இதில் அவருக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். சோல்ஜர்ஸ் பிலிம் பேக்டரி மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சாம்.சி.ஸ் இசையமைக்கிறார்.
சலார் படம் தள்ளிப்போனதால் சமீபத்தில் இத்திரைப்படம் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகும் என அறிவித்தனர். ஆனால் தற்போது இந்த படம் செப்டம்பர் 28ம் தேதியில் இருந்தும் தள்ளி வெளியாகும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த படம் தள்ளி போவதற்கான காரணமாக இந்த தேதியில் இந்த படத்தை தயாரித்த பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் இறைவன் என்கிற படமும் வெளியாகிறது. இதில் ஜெயம் ரவி நடித்துள்ளார்.