மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
744 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
744 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
744 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
744 days ago
சென்னை : சொத்து விபரங்களை தாக்கல் செய்யாததால் வரும் 22ல் நடிகர் விஷால் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'கோபுரம் பிலிம்ஸ்' நிறுவனத்திடம் இருந்து, நடிகர் விஷால் உரிமையாளராக உள்ள, 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனம் கடன் பெற்றிருந்தது. இந்த கடன் தொகையை, 'லைகா' நிறுவனம் ஏற்று, விஷால் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டது. கடன் தொகைக்கு உத்தரவாதமாக, படங்களின் உரிமையை தருவதாக, விஷால் நிறுவனம் உறுதி தெரிவித்தது.
இதையடுத்து, தங்களுக்கு தர வேண்டிய, 21.29 கோடி ரூபாயை வழங்காமல், வீரமே வாகை சூடும் படத்தை வெளியிட, விஷால் நிறுவனத்துக்கு தடை விதிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில், 'லைகா' நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதற்கிடையில், படம் வெளியாகி விட்டதால் கிடைக்கும் வருவாயை, நீதிமன்றத்தில் செலுத்தக் கோரி, மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, 'உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பெயரில், தேசிய வங்கியில் 15 கோடி ரூபாய்க்கு பிக்சட் டிபாசிட், விஷால் நிறுவனம் செலுத்த வேண்டும்' என, இடைக்கால உத்தரவிட்டு இருந்தார். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் விஷால் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவை, முதல் பெஞ்ச் உறுதி செய்து, அதை நிறைவேற்ற தவறினால், விஷால் பிலிம் நிறுவனம் தயாரிக்கும் படங்களை வெளியிடவும் தடை விதித்தது.
இவ்வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன், விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவை, விஷால் நிறைவேற்றவில்லை என தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டதும், விஷால் நேரில் ஆஜரானார். சொத்து விபரங்களை அளிக்காதது, 15 கோடி ரூபாய் செலுத்தாதது குறித்து, நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். பின், 2021 முதல் இப்போது வரைக்குமான, விஷாலின் வங்கி கணக்குகளின் விபரங்களையும், அவருக்கு சொந்தமான சொத்து விபரங்களையும், ஆவணங்களுடனும் தாக்கல் செய்ய, நீதிபதி ஆஷா உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, விஷால் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை. வங்கி கணக்கு, சொத்து விபரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து, வரும் 22ல் விஷால் நேரில் ஆஜராக, நீதிபதி ஆஷா உத்தரவிட்டார்.
744 days ago
744 days ago
744 days ago
744 days ago