தெலுங்கில் ரீமேக் ஆகியுள்ள 'மண்டேலா'
ADDED : 758 days ago
சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்குனராக அறிமுகமான படம் 'மண்டேலா'. யோகி பாபு கதாநாயகனாக நடித்த அந்தப் படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. 2021ம் ஆண்டுக்கான தேசிய விருதகளில், “சிறந்த அறிமுக இயக்குனர், சிறந்த இயக்குனர்” ஆகிய விருதுகளை மடோன் பெற்றார்.
அப்படத்தைத் தற்போது தெலுங்கில் 'மார்ட்டின் லூதர் கிங்' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்கள். அறிமுக இயக்குனர் புஜா கொல்லுரு இப்படத்தை இயக்கியுள்ளார். தமிழில் யோகி பாபு நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் சம்பூர்ணேஷ் பாபு நடித்துள்ளார். நரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 27ம் தேதி வெளியாக உள்ளது. தமிழைப் போலவே தெலுங்கிலும் இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என படக்குழுவினர் எதிர்பார்க்கிறார்கள்.