உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'என் உயிர் தோழன்' பாபு மறைவை கண்டு கொள்ளாத தமிழ் சினிமா

'என் உயிர் தோழன்' பாபு மறைவை கண்டு கொள்ளாத தமிழ் சினிமா

தமிழ் சினிமா உலகில் சில அடிப்படை விஷயங்களைக் கூட பல பிரபலங்கள் செய்வதில்லை என்பதற்கு மற்றுமொரு உதாரணமாக 'என் உயிர் தோழன்' பாபு மறைவு இருந்தது. ஆறுதல் சொல்வதற்கும், இரங்கல் சொல்வதற்கும் கூட இங்கு பிரபலமாக இருக்க வேண்டும்.

சுமார் 30 வருட காலமாக படுத்த படுக்கையாக தனது வாழ்க்கையை கொடுமையுடன் நகர்த்தி வந்த பாபு நேற்று முன்தினம் மறைந்து போனார். அவரைப் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், சினிமா உலகினருக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து, வசனகர்த்தா, நடிகராக இருந்தவர்.



அவருடைய மறைவுச் செய்தி வந்ததும் தமிழ் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தால் பாரதிராஜாவைத் தவிர வேறு யாருமே தெரிவிக்கவில்லை. பாபுவுடன் இணைந்து பணியாற்றியவர்கள், அல்லது மூத்த இயக்குனர்கள், நடிகர்கள் யாருமே கண்டு கொள்ளவில்லை.

பாரதிராஜா மட்டுமே பாபுவின் வீட்டிற்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.

குறைந்த பட்சம் சமூக வலைத்தளங்களிலாவது யாராவது சொல்லியிருப்பார்கள் எனத் தேடிப் பார்த்தால் அங்கும் கிடைக்கவில்லை. இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மறைவுக்கு மட்டுமே பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். அந்த சிறுமியின் அதிர்ச்சிகரமான மறைவை நேரலை செய்த ஊடகங்கள் கூட, பாபு மரணத்தைப் பற்றி கண்டு கொள்ளவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !