தனக்குத்தானே தாலி கட்டிய சீரியல் நடிகை
ADDED : 759 days ago
டிக்-டாக் பிரபலமான ஷோபனா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஷோபானா அடிக்கடி போட்டோ ஷூட், ரீல்ஸ் என பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், அவர் அண்மையில் வெளியிட்ட பதிவு ஒன்றில் தனக்குத்தானே தாலிக்கட்டுவது போல வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அது உண்மையாக செய்தது அல்ல. முத்தழகு சீரியலில் அவருக்கு திருமணத்தின் போது தாலிகட்டும் காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சிக்காகதான் ஷோபனா இப்படி தனக்குத்தானே தாலி கட்டிக் கொண்டுள்ளார்.