ஜோதிகாவுக்கு ஜோடியான மிர்ச்சி செந்தில் : வைரலாகும் புகைப்படங்கள்
ADDED : 759 days ago
பிரபல சின்னத்திரை நடிகரான மிர்ச்சி செந்தில் 'சரவணன் மீனாட்சி' தொடரின் மூலம் மிகவும் பிரபலமானார். திரைப்படங்களில் அறிமுகமாகி சில படங்களில் நடித்துள்ளார். எனினும், அவருக்கு சின்னத்திரையில் அதிக மவுசு கிடைத்து வருகிறது. தற்போது ஜீ தமிழ் சீரியலில் நடித்து வரும் செந்தில், நடிகை ஜோதிகாவுடன் சேர்ந்து ஒரு விளம்பர படத்தில் நடிக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜோதிகாவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள செந்தில், பிஸ்கட் விளம்பரத்தில் நடிப்பதாக பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.