மேக்னா எலன் நடிக்கும் 'இந்த கிரைம் தப்பில்ல'
ADDED : 744 days ago
உறுதி கொள், வீரபுரம், கபாலி டாக்கீஸ், தேடு, முதல் முத்தமே கடைசி முத்தம், நான் வேற மாதிரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மேக்னா எலன். சிறுபட்ஜெட் படங்களின் ஆஸ்தான நாயகியாக வளர்ந்து வருகிறார். தற்போது அவர் நடித்து வரும் படம் ‛இந்த கிரைம் தப்பில்ல'. மதுரியா புரொடக்ஷன்ஸ் சார்பில் மனோஜ் கிருஷ்ணசுவாமி தயாரிக்கிறார். தேவகுமார் இயக்கி உள்ளார்.
ஆடுகளம் நரேன், சின்னத்திரை நடிகர் பாண்டி கமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். குணச்சித்திர வேடங்களில் காமெடி நடிகர் வெங்கல்ராவ், முத்துக்காளை ஆகியோர் நடிக்கிறார்கள். பரிமளவாசன் இசையமைக்கிறார். ஏ.எம்.எம்.கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டது. இறுதிகட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது.