சேகர் கம்முலா வெயிட்டிங் - 50வது படத்தின் படப்பிடிப்பை இரவு பகலாக நடத்தும் தனுஷ்!
ADDED : 713 days ago
தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பீரியட் ஆக்சன் கதையில் உருவாகி இருக்கும் இந்த படம் டிசம்பர் 15ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் தற்போது தனது ஐம்பதாவது படத்தை இயக்கி வருகிறார் தனுஷ். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தை அடுத்து தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார் தனுஷ். அப்படத்தின் ஆரம்பகட்ட பணிகளை முடித்துவிட்டு தனுசுக்காக அவர் காத்துக் கொண்டிருக்கிறார். அதன் காரணமாகவே தனது ஐம்பதாவது படத்தின் படப்பிடிப்புக்கு இடைவெளி கொடுக்காமல் இரவு பகலாக நடத்தி வருகிறார் தனுஷ். சென்னையில் போடப்பட்டுள்ள பிரம்மாண்டமான செட்டுக்குள்ளேயே இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்து விடவும் திட்டமிட்டிருக்கிறார்.