வைரலாகும் விஜய்யின் லியோ படத்தின் ரன்னிங் டைம்!
ADDED : 761 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படத்தில் அவருடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படம் அடுத்த மாதம் 19ம் தேதி திரைக்கு வருகிறது. 5 மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் போஸ்டர்களை தற்போது ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
இந்த நிலையில் இந்த லியோ படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 39 நிமிடங்கள் என்று ஒரு தகவல் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படம் 2 மணி நேரம் 59 நிமிடம் ரன்னிங் டைம் இருந்தது. ஆனால் லியோ படத்தின் ரன்னிங் டைம் அதை விட 20 நிமிடம் குறைவாக உள்ளது.