கோட் சூட் லுக்கில் அஜித்தின் புதிய போட்டோ வைரல்!
ADDED : 753 days ago
நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தாலும் தனது தனிப்பட்ட ஆசை, கனவுகளையும் அவ்வப்போது நிறைவேற்றி வருகிறார். தற்போது பைக்கில் உலக சுற்று பயணத்தை முடித்துவிட்டு இம்மாத இறுதியில் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பில் இணைகிறார். படப்பிடிப்பு துபாயில் தொடங்க உள்ளதால் இதற்காக இப்போது சென்னை திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று சென்னையில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற சிறப்பு விருந்தில் அஜித் குமார் கோட் சூட் உடன் கலந்து கொண்ட போட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.