உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹாலிவுட் பட வாய்ப்பு - அட்லீ!

ஹாலிவுட் பட வாய்ப்பு - அட்லீ!


இயக்குனர் அட்லீ தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் வெற்றி படங்களை இயக்கினார். சமீபத்தில் ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து இயக்கிய 'ஜவான்' படம் உலகளவில் ரூ.1000 கோடி வசூலை நெருங்கியது. சமீபத்தில் அட்லீ அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் அட்லீ அளித்த பேட்டி ஒன்றில் ‛‛ஜவான் படம் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து ஹாலிவுட்டில் இருந்து புதிய படம் இயக்குவதற்கான அழைப்புகள் வருகிறது'' என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !