துல்கர் சல்மானின் ‛லக்கி பாஸ்கர்'
ADDED : 744 days ago
தனுஷ் நடித்த வாத்தி என்ற படத்தை இயக்கியவர் வெங்கி அட்லூரி. இப்படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியானது. தனுசுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்த இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இந்த நிலையில் வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி அடுத்து துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கும் லக்கி பாஸ்கர் என்ற படத்தை இயக்குகிறார். நேற்று இப்படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் படப்பிடிப்பும் தொடக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கும் வாத்தி படத்துக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைக்கிறார். சீதா ராமம் ஹிட் படத்துக்கு பிறகு துல்கர் சல்மான் நடிக்கும் இரண்டாவது தெலுங்கு படம் இதுவாகும். இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.