மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்
ADDED : 756 days ago
நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தங்களது மகன்களான உயிர், உலக் ஆகிய இருவரின் புகைப்படங்களையும் தொடர்ந்து சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். பல மாதங்களாக அவர்களின் முகத்தை காண்பிக்காமல் புகைப்படம் வெளியிட்டவர்கள், தற்போது அவர்களின் முகத்தை காண்பிக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள். இன்றைய தினம் தங்களது மகன்களான உயிர் மற்றும் உலக் ஆகிய இருவரையும் தங்களது கையில் வைத்தபடி நயன்தாராவுடன் தான் ரொமான்ஸ் செய்யும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். இந்த புகைப்படத்தை அவர் பதிவிட்ட சிறிது நேரத்திலேயே லட்சக்கணக்கான லைக்ஸ் குவிந்து வருகிறது.