ஷாரூக்கானுடன் மோதும் பிரபாஸ்
ADDED : 748 days ago
ஓரே ஆண்டில் ஷாரூக்கான் நடித்த பதான், ஜவான் ஆகிய இரண்டு படங்களும் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை ஈட்டி சாதனை படைத்தன. இதன் காரணமாக, ஷாரூக்கான் நடித்து வருகிற கிறிஸ்மஸ் தினத்தில் திரைக்கு வர இருக்கும் டங்கி என்ற படத்திற்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இதே கிறிஸ்துமஸ் தினத்தில் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் படமும் திரைக்கு வர உள்ளது. இப்படமும் பான் இந்தியா படமாக பல மொழிகளிலும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. அதன் காரணமாக ஷாரூக்கானின் டங்கி மற்றும் பிரபாஸின் சலார் என்ற இரண்டு படங்களுக்குமிடையே பலத்த போட்டி நடக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. இதற்கு முன்பு பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎப் படத்துடன் மோதிய ஷாரூக்கானின் ஜீரோ படம் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.