பவன் கல்யாணுக்கு வில்லனாகும் பார்திபன்
ADDED : 742 days ago
நடிகர் பவன் கல்யாண் தற்போது 'ஓ.ஜி' படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ஹரிஷ் - சங்கர் இயக்கத்தில் 'உஸ்தாத் பகத் சிங்' எனும் படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீ லீலா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ஸ் வீடியோ வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தில் பவன் கல்யாணுக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் பார்திபன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.