மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
733 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
733 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
733 days ago
தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் நுழைந்து அதிரடி காட்ட துவங்கி விட்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் அறிமுகமானது கன்னடத்தில் காந்தாரா இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கிய கிரிக் பார்ட்டி என்ற படத்தில் தான். அதன்பிறகு தெலுங்கில் நடித்த கீதா கோவிந்தம் படம் மூலம் பிரபலமான இவர் பின்னர் கன்னட திரையுலகம் பக்கம் தனது பார்வையை திருப்பவே இல்லை. அதுமட்டுமல்ல கிரிக் பார்ட்டி படத்தில் கதாநாயகனாக நடித்த ரக்ஷித் ஷெட்டியுடன் காதல் ஏற்பட்டு அந்த படம் வெளியாகும் முன்னதாகவே இருவரும் நிச்சயதார்த்த மோதிரங்களையும் மாற்றிக் கொண்டனர்.
ஆனால் கீதா கோவிந்தம் படத்தின் வெற்றி, அதில் தனக்கு கிடைத்த வரவேற்பு இவற்றைத் தொடர்ந்து நிச்சயதார்த்தத்துடன் ரக்ஷித் ஷெட்டியின் காதலை முறித்துக் கொண்டார் ராஷ்மிகா அதன்பிறகு எந்த ஒரு இடத்திலும் கன்னட சினிமாக்கள் பற்றியோ ரக்ஷித் ஷெட்டி பற்றியோ ராஷ்மிகா பேசுவதே இல்லை. இந்த நிலையில் அவரது முன்னாள் காதலர் ரக்ஷித் ஷெட்டி நடித்துள்ள 'சப்த சாகர்டாச்சே எல்லோ' என்கிற படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ரக்ஷித் ஷெட்டியிடம் ராஷ்மிகாவின் நட்பு தொடர்கிறதா என என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “இப்போதும் ராஷ்மிகாவுடன் தொடர்பில் தான் இருக்கிறேன். அவருக்கு சினிமாவில் மிகப்பெரிய கனவு இருக்கிறது. என்னை பொறுத்தவரை அவர் அந்த கனவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார் என தோன்றுகிறது. அதை அடைவதற்கு அவருக்கு மன வலிமை இருக்கிறது. அதனால் அவர் வழியில் அந்த சாதனையை நோக்கி செல்வதற்கு தட்டிக் கொடுத்து துணை நிற்போம்” என்று கூறியுள்ளார்.
733 days ago
733 days ago
733 days ago