உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'அனிமல்' படத்தில் அப்பா மகன் உறவு

'அனிமல்' படத்தில் அப்பா மகன் உறவு

தெலுங்கில் 'அர்ஜூன் ரெட்டி' படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிக்கும் ஹிந்தி படம் 'அனிமல்'. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் அனில் கபூர், பாபி தியோல், சுரேஷ் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி-சிரீஸ், சினி ஒன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் டிசம்பர் 1ம் தேதி வெளிவருகிறது. ரன்பீர் கபூரின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

இந்த படம் அப்பா அனில் கபூருக்கும், மகன் ரன்பீர் கபூருக்கும் இடையிலான உறவை ஆக்ஷன் களத்தில் சொல்கிறது என்பதை டீசர் மூலம் அறிய முடிகிறது. ரன்பீர் கபூரின் மனைவியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சாக்கெலட் பாயாக, அப்பாவிடம் அடிவாங்கும் மகனாக அறிமுகமாகும் ரன்பீர் கபூர், அதன் பிறகு தாடி வளர்த்து கொண்டு 'பீஸ்ட்' மோடுக்கு மாறுகிறார். அப்பாவியான ரன்பீர் கபூர் ஏன் அனிமலாக மாறுகிறார் என்பது தான் படத்தின் கதை என்று அறிய முடிகிறது. டீசர் பெரும் வரவேற்புடன் பகிரப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !