ஸ்கந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் இதோ
ADDED : 738 days ago
போயபட்டி சீனு இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஸ்கந்தா'. ஸ்ரீ லீலா, கவுதமி, ஸ்ரீ காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று திரையரங்குகளில் உலகெங்கும் வெளியானது விமர்சன ரீதியாக சுமாரான வரவேற்பைப் பெற்றாலும், மாஸ் மசாலா ரசிகர்களுக்கு இப்படம் ஆக்ஷன் விருந்து அளித்தது. இந்த நிலையில் இந்த படம் முதல் நாள் உலகளவில் ரூ. 18.2 கோடி வசூலித்ததாக படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மட்டும் ரூ. 13 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.