மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
706 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
706 days ago
2020ம் ஆண்டு கொரோனா தாக்கம் வந்த பிறகு தமிழ்த் திரையுலகம் கடந்த மூன்று ஆண்டுகளில் நிறையவே பாதிக்கப்பட்டது. ஓடிடி தளங்களின் அசுரத்தனமான திடீர் வளர்ச்சியால் சில முக்கிய படங்கள் அத்தளங்களில் நேரடியாக வெளியாகின. அது மட்டுமல்லாமல் ஒரு புதிய படம் வெளிவந்த பிறகு நான்கே வாரங்களில் ஓடிடி தளங்களில் வெளியாவதால் தியேட்டர்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைந்து வருகிறது.
முன்னணி நடிகர்களின் படங்களைத் தவிர மற்ற நடிகர்களின் படங்களுக்கு ரசிகர்கள் அதிகம் வருவதில்லை. சிறிய நடிகர்கள் நடித்த படங்கள் தரமாக இருந்தால் மட்டுமே அப்படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு தருகிறார்கள் அந்த விதத்தில் இந்த ஆண்டில் சில படங்கள் அப்படிப்பட்ட வரவேற்பைப் பெற்றன.
இந்த 2023ம் ஆண்டில் நேற்று முன்தினம் வெளியான படங்களுடன் சேர்த்து தியேட்டர்களில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 175ஐத் தொட்டுள்ளது. அந்த 175 படங்களில், “துணிவு, வாரிசு, டாடா, வாத்தி, அயோத்தி, பத்துதல, விடுதலை, பொன்னியின் செல்வன் 2, குட் நைட், போர் தொழில், மாமன்னன், மாவீரன், டிடி ரிட்டர்ன்ஸ், ஜெயிலர், மார்க் ஆண்டனி,” ஆகிய 15 படங்கள் ஓரளவு லாபம், சுமார் லாபம், சிறந்த லாபம் தந்ததாகத் திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
இந்த ஆண்டில் ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சிலம்பரசன், கார்த்தி, ஜெயம் ரவி, விஷால் ஆகியோர் நடித்த படங்கள் வெளியாகி உள்ளன. கமல்ஹாசன், சூர்யா நடித்த படங்கள் இந்த ஆண்டில் வெளியாக வாய்ப்பில்லை.
அடுத்த மூன்று மாதங்களில், “லியோ, ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், துருவ நட்சத்திரம், கேப்டன் மில்லர்” ஆகிய படங்கள் எதிர்பார்க்கப்படும் படங்களாக உள்ளன.
இந்த ஆண்டில் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியான படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. பத்துக்கும் குறைவான படங்களே அப்படி வெளியாகி உள்ளன. தியேட்டர்களில் வெளியான படங்களின் எண்ணிக்கை கடந்த ஒன்பது மாதங்களில் 175ஐத் தொட்டுவிட்டதால் அடுத்த மூன்று மாதங்களில் வெளியாகும் படங்களையும் சேர்த்தால் 200ஐக் கடக்க அதிக வாய்ப்புள்ளது.
706 days ago
706 days ago