தனுஷ் வெளியிட்ட தனது 50வது படத்தின் அப்டேட்!
ADDED : 792 days ago
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்களை ஒப்பந்தம் செய்து நடித்து வருகிறார். தற்போது தனது 50வது படத்தை தனுஷ் இயக்கி நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்று தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 50வது படம் இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளதாக தனது புதிய போட்டோ உடன் பகிர்ந்துள்ளார். இப்போது இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.