விஜய் 68வது படத்தில் இணைந்த சீனியர் நடிகர்கள்
ADDED : 995 days ago
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடிக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நேற்று அக்டோபர் 2ம் தேதி காலை இதன் பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. லியோ திரைப்படம் வெளியான பிறகு இது குறித்து அப்டேட் வெளியாகும் என்கிறார்கள்.
இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு பாடல் காட்சியுடன் சென்னையில் தொடங்குகின்றனர். ஏற்கனவே இதில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் 90ஸ் வெற்றி நாயகன் மைக் மோகன் இப்படத்தில் நடிக்க இணைந்ததாக கூறப்படுகிறது. இவருடன் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.