மெரி கிறிஸ்துமஸ் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்
ADDED : 704 days ago
அந்தாதூன் பட இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் நடிப்பில் ஹிந்தி, தமிழ் என இரு மொழிகளில் தயாராகியுள்ள படம் 'மெரி கிறிஸ்துமஸ்'. இதில் ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர், டினு ஆனந்த், ராஜேஷ் வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இந்த படம் வருகின்ற டிசம்பர் 15ம் தேதி அன்று வெளியாகும் என தெரிவித்தனர். ஆனால் டிசம்பர் மாதத்தில் சலார், டன்கி ஆகிய படங்கள் வெளியாகுவதால் இந்த படத்தை இப்போது முன்கூட்டியே டிசம்பர் 8ம் தேதி அன்று வெளியிடுவதாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.