அஜர்பைஜான் கிளம்பிய அஜித் - த்ரிஷா : ஒரு வழியாக துவங்குகிறது ‛விடாமுயற்சி'
ADDED : 779 days ago
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடிக்க உள்ள 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு நாளை(அக்., 4) ஆரம்பமாக உள்ளது. துபாய், அபுதாபி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் நடக்கும் என தகவல் வெளியானது. இந்நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் துவங்குகிறது. இதற்காக அஜித் அஜர்பைஜான் கிளம்பி சென்றார். விமான நிலையத்தில் அவர் கிளம்பி சென்ற போட்டோ, வீடியோ வெளியாகி உள்ளது. அதேப்போல் நடிகை த்ரிஷாவும் அஜர்பைஜான் புறப்பட்டு சென்றுள்ளார். இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்தி 2024ம் ஆண்டின் முதல் பாதியிலேயே படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.