உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடுத்த ஆண்டு ஏப்ரலில் திரைக்கு வரும் சூர்யாவின் கங்குவா

அடுத்த ஆண்டு ஏப்ரலில் திரைக்கு வரும் சூர்யாவின் கங்குவா

சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா, ஜெகபதிபாபு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் கங்குவா. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் பத்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது கங்குவா படக்குழு, தாய்லாந்து சென்று அங்குள்ள அடர்ந்த காடுகள் மற்றும் கடற்கரை பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. 25 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடைபெற உள்ள நிலையில் அத்தோடு கங்குவா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது. அதையடுத்து இறுதிக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் கங்குவா படத்தை திரைக்கு கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !