ஜி.வி.பிரகாஷின் 25வது படம்
ADDED : 733 days ago
இசையமைப்பாளர் ஆக ஜி.வி.பிரகாஷ் குமார் 100வது படத்தை விரைவில் எட்டயுள்ளார். அதேபோல், நடிகராக 25வது படத்தில் விரைவில் நடிக்கவுள்ளார். இதற்கு 'கிங்ஸ்டன்' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை கமல் பிரகாஷ் இயக்குகிறார். பேண்டஸி ஜானரில் உருவாகும் இந்த படத்தை ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர் என கூறப்படுகிறது. மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய பட்ஜெட்டில் இந்த படம் தயாராகிறதாம். இந்த படம் தான் அவரின் சினிமா பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்கிறார்கள்.