உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛மார்கழி திங்கள்' அக்.,20ல் ரிலீஸ்

‛மார்கழி திங்கள்' அக்.,20ல் ரிலீஸ்

இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் முதல் முறையாக இயக்கும் திரைப்படம் 'மார்கழி திங்கள்'. இதில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் ஷாம் செல்வன், நக்ஷா சரண் இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இயக்குனர் சுசீந்திரன் தனது வெண்ணிலா பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்து, வில்லனாகவும் நடித்து வருகிறார். இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 20ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்கு ஒரு நாள் முன்பு விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !