'அயலான்' டீசர் வெளியீடு : அசத்தும் விஎப்எக்ஸ் காட்சிகள்
ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் 'அயலான்' படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.
சிவகார்த்திகேயன் படங்களில் இருக்கும் நகைச்சுவையும் இந்த சயின்ஸ் பிக்ஷன் படத்தில் சேர்த்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. ஹாலிவுட் தரத்தில் டீசர் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
டீசரின் எடிட்டிங்கும், அதற்கான பின்னணி இசையும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்பதுதான் ரசிகர்களின் கருத்தாக உள்ளது. டிரைலர் வெளியிடும் போது அதைச் சரி செய்வார்கள் என நம்புவோம்.