ராம் சரணை இயக்கும் ராஜ்குமார் ஹிராணி?
ADDED : 775 days ago
ஹிந்தியில் 3 இடியட்ஸ், முண்ணா பாய் எம்.பி.பி.எஸ், சஞ்சு ஆகிய படங்களை இயக்கியவர் ராஜ்குமார் ஹிராணி. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது ஷாருக்கானை வைத்து 'டன்கி' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதைத்தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரணை வைத்து தனது அடுத்த படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தை மும்பையில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.