பகவந்த் கேசரி படத்தில் காஜல் அகர்வாலின் போஸ்டர் வெளியீடு!
ADDED : 749 days ago
நடிகை காஜல் அகர்வால் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார். திருமணம், குழந்தை ஆன பிறகும் தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் படம் 'பகவந்த் கேசரி'. காஜல் அகர்வால் இதில் கதாநாயகியாக நடித்துள்ளார். சைன் ஸ்கிரீன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
இதன் டிரைலர் வருகின்ற இன்று (அக்டோபர் 8ம் தேதி) வெளியாகுவதால் இப்போது இந்த படத்தில் காஜல் அகர்வால் கத்யாயானி ஆக நடிப்பதாக புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.