உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நிதின், வெங்கி குடுமுலா படத்தை குறித்து புதிய தகவல்!

நிதின், வெங்கி குடுமுலா படத்தை குறித்து புதிய தகவல்!

பீஷ்மா படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் நிதின் இயக்குனர் வெங்கி குடுமுலா கூட்டணியில் மீண்டும் ஒரு புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக முதலில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வந்தார். ஆனால், ஒரு சில காரணங்களால் இப்படத்தை விட்டு ராஷ்மிகா வெளியேற தற்போது அவருக்கு பதிலாக நடிகை ஸ்ரீ லீலா நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் .
இந்த நிலையில் இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வருகின்ற தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை 2024 கோடை விடுமுறைக்கு வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !