உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அக்டோபர் 13ல் வெளியீட்டிற்கான இடைவெளி

அக்டோபர் 13ல் வெளியீட்டிற்கான இடைவெளி

2023ம் ஆண்டிற்கான கடைசி மூன்று மாதங்களில் 50க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அக்டோபர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம் அக்டோபர் 6ம் தேதி 9 படங்கள் வெளியாகின.

வரும் வாரம் அக்டோபர் 13ம் தேதி குறிப்பிடும்படியான படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஓரிரு சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 19ம் தேதி 'லியோ' படம் வெளியாவதே அதற்குக் காரணம். 13ம் தேதி படத்தை வெளியிட்டால் ஒரு வாரம் கூட தாக்குப் பிடிக்க முடியாது. மேலும், 'லியோ' படத்தை தமிழகத்தில் உள்ள 1000 தியேட்டர்களில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு அடுத்த இரண்டு வாரங்களுக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக வாய்ப்பில்லை. அதன்பின் நவம்பர் 12ம் தேதி தீபாவளி வருகிறது. அன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை என்பதால் நவம்பர் 10ம் தேதியே தீபாவளிக்கான படங்கள் வெளியாகும். அதனால், நவம்பர் 17க்குப் பிறகுதான் இனி சிறிய படங்களுக்கான வெளியீடுகள் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !