அரியவகை நோயால் அவதிப்படும் ரச்சிதா
ADDED : 773 days ago
விஜய் டிவியில் தொடர்களில் நடித்து பிரபலமான ரச்சிதா மகா லெட்சுமி, சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் சின்னத்திரை நாயகிகளில் நம்பர் 1 இடத்தை பிடித்தார். ரசிகர்களின் பேவரைட் பட்டியலில் இப்போதும் முக்கிய இடத்தை பிடித்து வரும் ரச்சிதா, அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அண்மையில் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
அந்த பேட்டியில், ' பொதுவாக அளவுக்கு அதிகமாக உணவு எடுத்தால் தான் உடல் எடை கூடும். ஆனால், எனக்கு முகர்ந்து பார்த்தாலே உடல் எடை கூடி விடுகிறது. சமீபத்தில் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்த போதுதான் எனது ஹார்மோன் பிரச்னை குறித்த அதிர்ச்சி தகவலை என்னிடம் சொன்னார்கள்' என்று கூறியுள்ளார். மேலும், ஆரோக்கியமான டயட் உடற்பயிற்சி என உடல் எடை கூடாமல் மிகவும் ஜாக்கிரதையாக மெயிண்டெயின் செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.