தி எக்ஸ்ட்ரானடிரி மேன் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
ADDED : 806 days ago
வக்கான்தம் வம்சி இயக்கத்தில் நடிகர் நிதின் தனது 32வது படமாக 'தி எக்ஸ்ட்ரானடிரி மேன்' படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ஸ்ரீ லீலா நடிக்கிறார். ஸ்ரீ சத் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படம் வருகின்ற டிசம்பர் 23ம் தேதி அன்று வெளியாகிறது என அறிவித்திருந்தனர். ஆனால் தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் தேதியை அறிவித்துள்ளதால் இப்போது இந்த படத்தை முன்கூட்டியே வருகின்றன டிசம்பர் 8ம் தேதி அன்று வெளியாகும் என படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.