மீண்டும் இணையும் ஜதி ரத்னாலு கூட்டணி
ADDED : 726 days ago
தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது.
கடந்த ஆண்டு கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் நவீன் பொலிஷெட்டி, ஸ்ரீ லீலா நடிப்பில் உருவாகுவதாக அறிவித்த 'அனகானகா ஒக்க ராஜூ' திரைப்படம் ஒரு சில காரணங்களால் கைவிடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் இந்த படத்தை தொடங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தை கல்யாண் ஷங்கர் கதையில் அனுதீப் இயக்குகிறார் என கூறப்படுகிறது. ஏற்கனவே நவீன் பொலிஷெட்டி, அனுதீப் கூட்டணியில் வெளிவந்த ஜதி ரத்னாலு திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.