அக்ஷய் குமாரின் ஜிம் மேட் ஆக மாறிய டொவினோ தாமஸ்
மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகர் டொவினோ தாமஸ். பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் சீனியர் நடிகராக வலம் வருபவர் நடிகர் அக்ஷய் குமார். இவர்கள் இருவருமே தற்போது கடந்த சில நாட்களாக ஜிம் மேட் ஆக மாறியுள்ளனர். இவர்கள் இருவரை பொறுத்த வரை எப்போதுமே உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டவர்கள். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தி வருபவர்கள். இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த டொவினோவையும் மும்பையைச் சேர்ந்த அக்ஷய் குமாரையும் ஹைதராபாத்தில் உள்ள ஜிம் ஒன்று ஒருங்கிணைத்து இருக்கிறது.
ஆம் தற்போது இவர்கள் இருவரது படங்களின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் தான் நடைபெற்று வருகிறது. இதில் அக்ஷய் குமார் தற்போது ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் சிங்கம் அகைன் படத்திற்காக ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அக்ஷய் குமார் நடித்த கில்லாடி என்கிற படத்தின் பெயரை குறிப்பிட்டு ரியல் கில்லாடியுடன் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் டொவினோ தாமஸ்.