ஆதிபுருஷ் படத்திற்கு எதிரான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி
ADDED : 783 days ago
ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து ஆதிபுருஷ் படம் தயாரானது. இதில் பிரபாஸ் ராமராகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும், சயிப் அலிகான் ராவணனாகவும் நடித்து இருந்தனர். ஆதிபுருஷ் படத்தில் நடித்தவர்களின் உடைகள், வசனங்கள், தோற்றங்கள் அனைத்தும் ராமாயணத்தை அவமதிப்பதாக உள்ளது என்று விமர்சித்தார்கள். ஆதிபுருஷ் படத்துக்கு எதிராக பல நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது.
அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. படத்திற்கு ஏற்கெனவே தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பதால் அதன் பிறகு படம் பற்றிய விவாதங்கள் தேவையற்றது என்று கூறி படத்திற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.