கல்கி 2898 ஏடி - அமிதாப் போஸ்டர் வெளியீடு
ADDED : 723 days ago
'நடிகையர் திலகம்' படத்தை இயக்கிய நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கல்கி 2898 ஏடி'.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அமிதாப்பச்சனின் கதாபாத்திரப் போஸ்டர் இன்று அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
“உங்கள் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதும், உங்கள் மகத்துவத்தைக் காண்பதும் ஒரு மரியாதை, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சார்,” என கல்கி படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசன் பிறந்தநாள் வர இருக்கிறது. அதனால், அன்றைய தினம் அவருடைய போஸ்டரையும் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.