ரசிகர்களுக்கு ஷாரூக்கானின் சர்ப்ரைஸ் அறிவிப்பு
ADDED : 725 days ago
அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, யோகி பாபு உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் ஜவான். அனிருத் இசையமைத்த இந்த படம் 1100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 13ம் தேதியான நாளை தேசிய சினிமா தினம் என்பதால் ஜவான் படத்தை தியேட்டர்களில் பார்த்தால் டிக்கெட் விலை ரூபாய் 99 மட்டுமே என்று ஷாரூக்கானின் ரெட் சில்லி நிறுவனம் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது. இப்படி ஒரு அறிவிப்பை ஷாரூக்கான் வெளியிட்டதை அடுத்து ஏராளமானோர் ஆன்லைனில் ஜவான் படத்தை பார்ப்பதற்கு டிக்கெட் புக்கிங் செய்து வருகிறார்கள். மேலும் திரையரங்கங்களில் வெளியாகி ஜவான் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து நவம்பர் இரண்டாம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.