ஐமேக்சில் வெளியாகும் லியோ
ADDED : 724 days ago
விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற 19ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இந்தியா முழுக்க வெளியாகும் இப்படம், அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா உள்பட பல வெளிநாடுகளிலும் ஐமேக்ஸ் வசதி உள்ள இடங்களில் வெளியாக உள்ளது. முதன்முறையாக விஜய்யின் லியோ படம் ஐமேக்ஸில் வெளியாக இருப்பதாக இப்படத்தை தயாரித்திருக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமாகி உள்ளனர்.