பால்க்காரியாக மாறிய சைத்ரா ரெட்டி : மாட்டுபண்ணை ஆரம்பித்தார்
ADDED : 732 days ago
பிரபல சின்னத்திரை நடிகையான சைத்ரா ரெட்டி தற்போது கயல் சீரியலில் நடித்து வருகிறார். அஜித்தின் வலிமை படத்திலும் நடித்திருந்தார். சின்னத்திரை நடிகைகள் பலரும் பொட்டிக், காஸ்மட்டிக் பிசினஸ் என நடத்திக் கொண்டிருக்க புது ரூட்டில் பிசினஸில் களமிறங்கியிருக்கிறார் சைத்ரா. தனது இன்ஸ்டாகிராமில் மாட்டிலிருந்து பால் கறக்கும் வீடியோ வெளியிட்டுள்ள சைத்ரா, 'ஒருநாள் 50 மாடுகளை வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்போது சொந்தமாக மாட்டுபண்ணை ஆரம்பித்திருக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
சைத்ராவின் இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.