ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸிற்கு சத்யஜித் ரே விருது
ADDED : 775 days ago
ஹாலிவுட்டின் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் மைக்கேல் டக்ளஸ். ஆஸ்கர், கோல்டன் குளாப் போன்ற பல விருதுகளை வென்றுள்ளார். இவருக்கு சத்யஜித் ரே வாழ்நாள் விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கோவாவில் 54வது சர்வதேச திரைப்பட விருதுகள் வரும் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறுகிறது. இதில் இந்தியன் பனோரமாவில் பல படங்கள் திரையிடப்படும். அதேப்போன்று வெளிநாட்டு படங்களின் பிரிவிலும் நிறைய சர்வதேச படங்கள் திரையிடப்படும். அதோடு உலகளவில் சினிமாவில் சிறப்பாக பங்காற்றிய கலைஞர்களுக்கு சத்யஜித் ரே சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டு நடிகர் மைக்கேல் டக்ளஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.