‛வரதராஜ மன்னர்' பிருத்விராஜ்
ADDED : 721 days ago
‛கேஜிஎப்' படங்களின் மாபெரும் வெற்றிக்கு பின் பிரசாந்த நீல் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‛சலார்'. பிரபாஸ், ஸ்ருதிஹாசன் மலையாள நடிகர் பிருத்விராஜ் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். அதிரடி ஆக் ஷன் படமாக பன்மொழிகளில் தயாராகி வருகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. நடிகர் பிருத்விராஜிற்கு இன்று(அக்., 16) பிறந்தநாள். அவருக்கு வாழ்த்து தெரிவித்த படக்குழு, ‛வரதராஜ மன்னர்' வேடத்தில் பிருத்விராஜ் நடிப்பதாக அறிவித்து அவரின் கேரக்டர் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். டிச., 22ல் படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் ரிலீஸாகிறது.