உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கால்பந்து வீரராக வளரும் அஜித் மகன்

கால்பந்து வீரராக வளரும் அஜித் மகன்

புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பார்கள். அதற்கேற்ப அஜித்தின் மகன் கால்பந்து வீரராக வளர்கிறார். அப்பா பைக் ரேசர், அம்மா டென்னிஸ் வீராங்கனை. அந்த வகையில் மகன் ஆத்விக் கால்பந்து வீரராகிறார்.

அஜீத், ஷாலினி தம்பதிகளுக்கு அனோஷ்கா, ஆத்விக் என இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். அஜித் சமூக வலைத்தளங்களில் இல்லை. ஆனால், அவரின் மனைவியும் நடிகையுமான ஷாலினி சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கிறார். அவ்வப்போது பதிவுகளை பதிவிட்டு வருகிறார் ஷாலினி.

சமீபத்தில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறார் அஜித் மகன் ஆத்விக். அந்த படங்களை ஷாலினி பதிவிட்டுள்ளார். 'எங்கள் குட்டித் தல' என்று ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !